Tuesday, May 25, 2010

வாஷிங்க்டன் டிரிப்பும் செங்கமலம் சிரிப்பும்

மக்களே மக்களுக்கு மக்களே  இந்த அமெரிக்கா மாநகரத்துக்கு வந்ததுல இருந்து இது வரைக்கும் எங்கயுமே போனதே இல்ல, கடந்த பத்து மாசமா என் டேமேஜர் நாய் சேகர் வரிசையா ஆணி புடுங்க வச்சதுல வீடு  ,ட்ரைன்,பக்கத்துல எப்பயும் போல வெள்ளைகார மற்றும் கருப்பு கிழவிகள்னு வாழ்கை நம்ம டாக்டர்  விஜய் படங்கள் மாதிரி ஒரே மாதிரி போய்ட்டு இருந்துது, அப்பதான் திடூர்னு ஒரு டவுட்டு வந்துது, நம்ம அமெரிக்காவுல இருக்கோம்னு ஊர்ல எல்லா பய புள்ளையும் நம்பிட்டு இருக்கு (முக்கியமா பொண்ண பெத்த மாமனார்கள்) ஆனா ஒரு போட்டோ கூட அமெரிக்கா  பின்னணியில இல்லையே, வரலாறு ரெம்ப முக்கியமசேனு யோசிச்சப்பதான் திடீர்னு "பெருசு" கால் பண்ணுச்சு.

இந்த இடத்துல பெருசு யாருன்னு சொல்லணும்,  பெருசு சமீபதுலத்தான் பழக்கமானாறு அமெரிககாவுக்கு ஒரு வேல விஷயமா பாமிலிய விட்டுட்டு வந்துருக்காரு, ஊரு கோயம்புதுரு, ஆளு பஸ்சுக்கு மற்ற கண்ணாடிய மாட்டிக்குட்டு பாக்யராஜ் ஸ்டைல இருப்பாரு , ஏழு கழுத வயசானாலும் இன்னும் மன்மதனுக்கு மாமா பையன்னு மனசுல நெனப்பு.அந்த பெருசுதான் கால் பண்ணி "சிவா வர்ற வீக் எண்டு எங்கயாவது போலாமா" நு கேட்டுச்சு, ஆஹா ...சிக்குனாண்டா சித்தப்பு ...அப்படின்னு மனசுல நெனச்சுகுட்டு ஒகே ..பெருசு போலாம் ..எடத்த நீயே சூஸ் பண்ணுனு சொல்லிட்டேன் (நம்மளுகுத்தான் எந்த இடமும் தெரியாதே!)

பெருசு டக்குனு "வாஷிங்டன்" போலாம்னு சொல்லுச்சு..ஆஹா நம்மளுக்கு வாஷ் பண்றதுக்கு எங்க போறதுனே தெரியாது , இதுல வாஷிங்க்டனான்னு மனசுல நெனச்சுகுட்டு சரி போலாம் ஆனா எப்படி போறது, இது என்ன நம்ம ஊரா
SETC புடிச்சு போறதுக்கு. ஆனா பெருசு சொல்லுச்சு "நான் நல்லா டிரைவ் பண்ணுவ்வேன்,நாம கார் வாடகைக்கு எடுத்து போலாம்"...பெருசோட கண்ணாடிய பாத்தா "வரும்  ஆனா வராது" தான் யாபகம் வந்துது .அப்பதான் பிரெண்ட் ஒருத்தன் ஐடியா அய்யாசாமி சொன்னான் "சீனாக்காரன் package டூர் வச்சுருகான் அதுல போடா
 மச்சி ரெம்ப சீப்பா இருக்குமுனான்.

சரின்னு அவன் பேச்சை கேட்டு டிக்கட்டையும் புக் பண்ணியாச்சு,பெருசும் ரோஸ்பவுடர்,ஜவ்வாதுன்னு பர்சேஸ ஆரம்ப்சிருச்சு.சரி நம்மளும் பெட்டில என்ன இருக்குனு பாத்தா, ஊர்ல இருந்து வரும்போது கொண்டு வந்தா பவர் சோப்பு பனியனும் , தி-நகர் பிளாட்பார்ம்ல வாங்குன நைட் பேண்டும்தான் இருக்கு, ஆஹா இது வேலைக்கு ஆகாது ,வெள்ளைக்கார பொன்னுகல்லாம் வர இடத்துல பந்தாவா போகணும்னு , இந்த ஊர் சரவணா ஸ்டோருக்கு (JC penny) போயி நாலு டி-ஷர்ட் அள்ளிபோட்டுட்டு டூருக்கு ரெடி ஆயாச்சு.

சனிக்கிழமையும் வந்துர்ச்சு, காலைல சீக்கிரமா எந்திரிச்சி பந்தாவா ரயில்வே ஸ்டேசனுக்கு போயி பெருசுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு லைட்டா ஒரு கதம்ப சுமெல் வரவும்  பக்கத்துல இருந்த கறுப்பன பார்த்தா , அவன் வேட்டைக்காரன் படம் பாத்துட்டு theatara  விட்டு வெளிய வரவான எப்படி பப்ளிக் கேவலமா பார்க்குமோ அப்படி என்னைய பார்க்குறான். ஆஹா நம்ம குளிச்சி சென்டேல்லாம் போட்டுட்டுத்தான வந்துருகோம்னு, தூரத்துல பார்த்தா , நம்ம பெருசு செவப்பு பேண்ட்டு ,பச்சை சட்ட ,கண்ணுல MGR கண்ணாடி , மூஞ்சில திப்பி திப்ப்பியா கரகாட்டம் ஆடறவங்க மாதிரி ரோஸ்பவுடர் , ஜவ்வாது போட்டுட்டு ஜிகு ஜிக்கான்னு வந்து நிக்கறாரு,இப்பதான் தெரிஞ்சுது அந்த வாடை எங்க இருந்து வந்துதுன்னு.
பெருசு அப்படியே நம்ம அத பார்கறத பாத்துட்டு  என் தோள்ல தட்டி கொடுத்து ஒரு சிரிப்பு சிரிச்சுது(அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்னா அவர் அழக
 பார்த்து நாம பொறாமை பட்றோமாமா,அதனால நம்மள ஆறுதல் படுத்துது)

ட்ரைன் வரவும் அப்படியே பெருச பூ போல உள்ள கூட்டிட்டு போயாச்சு, அப்படியே நியூயார்க்ல  இறங்கி சைனா டவுனுக்கு நடக்க ஆரம்பிச்சோம்.... ஆரம்பிச்சா.....(செங்கமலம் சிரிப்பு அடுத்த பதிவில்).

Sunday, January 17, 2010

சிவாவின் இந்த இடுகை பெரிய பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.தமிழ்மணம் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யம்

ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு இடுகைதான் போட்டேன் அதுக்கே நிறைய response அதுவும் பெரிய பெரிய தலைகள் எல்லாம் போன் ஈமெயில் மூலமா ஒரே பாராட்டு.முக்கியமா பதிவுலக சூப்பர் ஸ்டார்கள் லக்கி, கேபிள் சங்கர் ,அதிஷா,செல்வேந்திரன்,கார்கி,tvpravi எல்லாரும் இவ்ளோ எங்க இருந்தீங்க , உங்கள ரெம்ப மிஸ் பண்ணிட்டோமேன்னு பீல் பண்ணினாங்க.அந்த பீலிங்க்ள அடுத்த பதிவே போட முடியாம போய்டுச்சு(நாயே நாயே ப்ராஜெக்ட்ல ஆணி நிறைய புடுங்கிடிருந்த , அத ஒத்துக்கடா (இதை கவுன்டமணி ஸ்டைலில் படிக்கவும்)) இந்த பதிவுக்கு ஏன் சிவா 5nu பேர் வச்சேனா கமல் 50 மாதிரி ஒரு catchy யா இருக்கணும்னுதான்.

ம்ம் வாழ்கையில் நம்மளும் அமெரிக்கா வந்தாச்சு 5 மாசமும் ஓடிருச்சு.இந்த    6      மாசத்துல என்ன பெருசா சாதிச்சோம்னு (இதோடா) திரும்பி பார்த்தா ஒன்னும் இல்ல .


இப்பவரைக்கும் டாலர தவிர மத்த எந்த நாணயத்தையும் கரெக்டா அடயாளம் சொல்லவே தெரியல(ம்ம்ம் கேவலமா தான் இருக்கு என்ன பண்ண )

எங்க ஊர்ல மற்றும் சென்னையில் குஜாலா பிரெண்ட்சொட லைப் என்ஜாய் பண்ணிட்டு இருந்தவனுக்கு இந்த ஊர்ல லைப் ஸ்டைல் கொஞ்சம் போர்தான் இருக்கு.

இந்த 5 மாதத்தில் மிஸ் பண்ணிய சின்ன சின்ன (எனக்கு மிக பெரிய) சந்தோசங்கள்
1 ) பைக் ஓட்டுவது .நான் ரெம்ப மிஸ் பண்ணிய விஷயம் இதுதான்.என்னோட யமஹா 135 வும் ராயல் என்பீல்ட்ட் புல்லட்டும் ஏன் காள்ளுகுல்லையே இருக்கு (ஏன் கண்ணுகுல்லையே னுதான் சொல்லனுமா , இது பைக் மேட்டர் )



2 ) மழை நேரத்தில் பிரென்சொட டீ கடையில் நின்னு கழுவாத டம்ப்ளரில் டீ தம் குடிச்சிகிட்டே மொக்கை போடுறது .



3 ) பழைய புக் கடைய தேடி தேடி மக்கல் வாசனை வீச கூடிய புத்தகங்கள் வாங்கறது



4) மெரினா பீச்சு பெசன்ட் நகர் பீச்சு போயி பிகரோட வர்றவனை பாத்து வயறு எரிஞ்சி அந்த எரிச்சல்ல பசங்களோட சேந்து அவங்கள கலாய்க்கறது.



5 ) செகண்ட் ஷோ சினிமா பார்த்துட்டு நைட்டு ரெண்டு மணிக்கு பரோட்டா கடை தேடி அலையறது.



6 ) கைலிய தொடை வரைக்கும் மடிச்சி கட்டிக்கிட்டு புல்லேட்ல தட தடன்னு எதிர் காதுல அம்மாவை கூட்டிகிட்டு திண்டுக்கல் மதுரைன்னு போறது .



7 ) பக்கத்துக்கு வீட்டு அனு பாப்பவ கொஞ்சறது

8 ) நைட்டு பசங்களோட  சினிமா தியேட்டர் தண்ணி தொட்டியில் உக்காந்து மொக்கை போடறது

9 ) நாகர், முனியாண்டி விலாசில் புரோட்டா பார்சல் பண்ணி வீட்ல வந்து சுஜாதா புக் படிச்சுகிட்டே சாப்பிடுறது

10 ) இப்ப ப்ளாக்லாம் படிக்க ஆரம்பிச்சவுடனே எல்லா ப்லோக்கேர்ஸ் ரெம்ப பரிச்சியமான மாதிரி ஒரு பீலிங்கு , அதனால அடுத்த தப சென்னை வர சொல்ல எல்லாரையும் மீட் பண்ண ஆசை , யாருக்கும் என்னைய தெரியாது , ஆனா நாம எல்லாரையும் பார்க்கலாம்.



இன்னும் நெறைய சந்தோசங்கள் மிஸ் பண்ணினாலும் பையன் அமெரிக்காவில் இருக்கான்னு அம்மா பெருமையா அடுத்தவர்களிடம் சொல்லி பெருமை படும் நிகழ்வு ஒன்றுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

[தலைப்பு சும்மா ல்லுல்லுலயேஏஎ ,எல்லாம் ஒரு விளம்பரம்தான்  ஹி ஹி ஹி]
தல சான்சே இல்ல உங்க எழுது நடை ஓட்டம் ஜாகிங் எல்லாம் ரெம்ப நல்ல இருக்கு. முக்கியமா வீரசேகரவிலாஸ் தொடர் அப்படியே சாவி, தேவன் எழுத்து மாதிரியே இருக்கு .இந்த அம்மா பதிவு ரெம்ப அருமை அப்படியே ஒரு நிமிஷம் பீலிங் ஆயிட்டேன் (சீரியசா !!) ஆனா இதே பீலிங் அவங்க கூடவே இருந்தா வருமான்னு தெரியல .இன்னும் நிறைய கமெண்ட் போடணும் போல இருக்கு ஆனா டிரஸ் வாஷ் பண்ண  போட்டுருக்கேன்.போயி எடுத்துட்டு வந்துட்டு கண்டின்யு பண்றேன்