Monday, October 26, 2009

சிறந்த பிளாக்கர் இல்லன்னா blabber ஆவது எப்படி

சின்ன வயசுல இருந்து படிச்ச கதை,கவிதை,இலக்கியம்(அட்ரா அட்ரா அட்ரா) எல்லாம் கொடுத்த தைரியத்தில் ப்லாக் ஆரம்பிச்சாச்சு.எனக்கு புடிச்ச கேரக்டர் லக்கி லுக்,கணேஷ் வசந்த் , நரேந்திரன் ,வந்தியத்தேவன் இவங்கதான்.கணேஷ்வசந்த் தவிர மத்த கேரக்டர் எல்லாம் உஷாரா நம்ம ஆளுங்க புக் பண்ணிட்டாங்க .கன்னி(gensuku என்னாது kannan நா!! ) ப்லாக் என்ன எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு மூளைய தவிர எல்லாம் இடமும் சூடா ஆய்ருச்சு.
சரி ஆபீஸ் அவர்ல எவ்ளோ ப்லாக் படிச்சு manageruku இனிமா கொடுத்துருப்போம் அந்த அனுபவத்தை வைச்சு  எதாவது மொக்கை போடுவோம்ன்னு இதை ஆரம்பிச்சிருக்கேன்.
தைரியம் இருக்கவங்க யாரும் இதுக்கு பின்னூட்டம் போடலாம் !

சிறந்த பிளாக்கர் இல்லன்னா  blabber  ஆவது எப்படி
(இந்த ப்ளாகில்
 வரும் யாவும் கற்பனை அல்ல , முழுக்க முழுக்க உண்மை
)
1) மொதல நீங்க எந்த கட்சின்னு முடிவு பண்ணிக்கோங்க சாருவா இல்ல ஜெயமோகனா.இல்ல நான் ரெம்ப நல்லவன் வில்லு படத்தை கூட பாமிலியோட பார்பேன் அதனால  நான் எந்த கட்சியும் இல்லன்னு முடிவெடுத்தா ஐயோ பாவம் உங்கள யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஹிட்ஸ் வராது.

2) சரி  கட்சி முடிவு பண்ணியாச்சி இப்போ எந்த கட்சில இருக்கோமோ அதுக்கு ஏத்த மாதிரி சில கீ வோர்ட்ஸ் மனப்பாடம் பண்ணனும்.(எப்படி காலேஜ் பரிச்சைல கொசிடின்ல வந்த நாலு வார்த்தைய வச்சு நாலு பக்கம் எழுதுவோமோ அது மாதிரி )
சாரு கட்சினா ராசலீலா,ஜீரோ டிகிரி,கோணல் பக்கங்கள், மதுமிதாவின்  பாம்பு கதைகள்.
ஜெயமோகன் கட்சினா ஏழாம் உலகம்,உயிர்மை,அசோகவனம், நான் கடவுள் படம் அப்புறம் விளிம்பு நிலை மனிதர்கள் (இந்த வார்த்தைய யாருபா கண்டுபுட்சது இந்த உலகத்துல எல்லாரும் விளம்பு நிலை மனிதர்கள் தான்)

3) சரி  திடீர்னு  சாரு ஆட்டை  வறுத்து திங்க போயிட்டாரு இல்ல பிரான்சில பீரு விட போய்ட்டாரு
ஜெயமோகன் அடுத்து "பட்டர் நான் கடவுள்" ன்னு படத்துக்கு வசனம் எழுத கெட்ட வார்த்தை practice பண்ண போய்ட்டாருன்னா உங்களுக்கு டாபிக்கே கிடைக்காது .அதனால சைடுல புதுமைபித்தன்,பிரமிள், தி ஜானகிராமன் அவங்க படைபுகளோட பெயர மனப்பாடம் பண்ணனும்

4) அப்புறம் ரெம்ப முக்கியமா தவறி கூட லோக்கல் தமிழ் சினிமா பத்தி பெருமைய பேசக்கூடாது. உலக சினிமா பத்தி ஒரு தொடர் ஆரம்பி(ச்சு)க்கணும். 
நாடி நரம்பு எல்லாம் சேலம் சிவராஜ் லேகியம் சாப்பிட மாதிரி எனர்ஜிடிக்கா எமொசனலா விமர்சனம் எழுதனும்.படத்த பாக்கனும்னு கூட அவசியம் இல்ல.wiki pediayala கண்டிப்பா விமர்சனம் இருக்கும், என்ன இங்கிலிஷ்ல இருக்கும் ukg படிக்கற அக்கா பையன படிக்க சொல்லி அர்த்தம் கேட்டு விமர்சனம் எழுதனும். முக்கியமா கடைசி லைன்ல இந்த மாதிரி சினிமா எப்ப TAMIla வரும்னு பாவமா ஒரு கேள்வி கேக்கணும். (வந்தா சொல்றோம் போடான்னு பின்னூட்டம் வரும் , கண்டுகாதீங்க)

5) பயண கட்டுரைன்னு ஒரு மெகா சீரியல ஆரம்பிங்க.எந்த டாபிக்கும் இந்த மாசம் கிடைக்கலீனா  சும்மா சட்டுன்னு பயண கட்டுரை 7 nu (எவன் நம்பர ஞாபகம் வச்சுக்க போறான்) ஆரம்பிச்சு போகாத ஊர பத்தி ஒரு மொக்கைய எழுதனும்.நீங்க பஸ் ஸ்டாண்ட் போனது , ஆட்டோகாரண்ட திட்டு வாங்கனது, ட்ரைன்ல ஏறாத பிகர பத்தி , ரயில்வேஸ்டேஷன்னோட சுத்தம், பயணத்தில் படிச்ச எதாவது ஒரு புக்கு(யாரு படிச்சா), இடையில சாப்ட சமோசா முறுக்கு  காஞ்ச தோசை அப்புறம் முக்கியமா travela யாராவது உங்கள புகழந்து பேசுனது.

6) இப்பதான் பயங்கர முக்கியமான கட்டத்துக்கே வந்திருக்கோம். உங்களுக்குன்னு சொந்தமா ஒரு ஜட்டி இல்லாட்டி கூட ப்லாக் உலகம் மன்னிசுரும் ஆனா உங்களுக்குனு ஒரு கேரக்டர் வேணும்.பேரு வந்து கண்டிப்பா செம லோக்கலா இருக்கனும் அதாவது டோமரு , கோவாலு ,குமாரு,டெல்லி,வாலு.அப்புறம் நம்ம பண்ணின எல்லா கண்றாவியும் இந்த கேரக்டர் பண்ணினதா அடிக்கடி ப்லாக் போடணும்.

7) பக்கத்துக்கு வீட்டு பாட்டி வயசுக்கு வந்த functionku போகட்டியும் பரவா இல்ல ஆனா எங்க புத்தக கண்காட்சி நடந்தாலும் ச்ய்ச்லேபட்ட கொரங்கு பெடல் போட்டாவது போயிரனும்.போகும்போது மறக்காம கேமரா செல் போன் எடுத்துட்டு போங்க.எப்படியும் ப்லாக் போடா டாபிக் தேடி நம்ம ப்லாக்கேர்ஸ் எல்லாம் வந்திருப்பாங்க.அப்புறம் புக்கு விக்க நம்ம ஸ்டார் ரைடர்ஸ் எல்லாம் வந்து இருப்பாங்க. அப்படியே அவங்களோட ஒரு போட்டோ எடுத்துட்டு வந்து ப்ளாகில் போட்டு கெத்து காமிக்கலாம்.

8) அப்புறம் எப்பவும் காமெடி மேட்டராவே போடீங்கனா உங்கள காமெடி பீசுனு சொலிருவங்க அதனால அப்ப அப்ப எதாவது சீரியஸ் மேட்டர் போடணும் .

இப்போதைக்கு எதோ கொஞ்சம் ஜல்லியடிச்சுருகேன்(சுஜாதா ரசிகன்னு காமிக்க வேணாமா )
வேற யாராவது டாபிக் கிடைகலீனா இதையே கண்டின்யு பண்ணுங்க


கணேஷ் : வசந்த் என்ன தேருவமா இந்த கேசுல
வசந்த் : பாஸ் கண்டிப்பா தேறுவோம்.நான் நேத்தே நம்ம ரிசப்னிஸ்ட் மாலா கைய புடிச்சி ஜோசியம் பாத்துட்டேன்
கணேஷ் :  நீ திருந்தவே மாட்ட

2 comments:

தருமி said...

//தைரியம் இருக்கவங்க யாரும் இதுக்குப் பின்னூட்டம் போடலாம்.//

இருக்கு ...

KANNAA NALAMAA said...

Dr.GANESH-VASANTH
I want to become a follower of u.
I dont know how to become ur follower.
please let me know how?
it will be much beneficial to other blogviewers also.
Er.Ganesan fromGanapathy/Coimbatore
sivagamiganesan@gmail.com

Post a Comment