ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு இடுகைதான் போட்டேன் அதுக்கே நிறைய response அதுவும் பெரிய பெரிய தலைகள் எல்லாம் போன் ஈமெயில் மூலமா ஒரே பாராட்டு.முக்கியமா பதிவுலக சூப்பர் ஸ்டார்கள் லக்கி, கேபிள் சங்கர் ,அதிஷா,செல்வேந்திரன்,கார்கி,tvpravi எல்லாரும் இவ்ளோ எங்க இருந்தீங்க , உங்கள ரெம்ப மிஸ் பண்ணிட்டோமேன்னு பீல் பண்ணினாங்க.அந்த பீலிங்க்ள அடுத்த பதிவே போட முடியாம போய்டுச்சு(நாயே நாயே ப்ராஜெக்ட்ல ஆணி நிறைய புடுங்கிடிருந்த , அத ஒத்துக்கடா (இதை கவுன்டமணி ஸ்டைலில் படிக்கவும்)) இந்த பதிவுக்கு ஏன் சிவா 5nu பேர் வச்சேனா கமல் 50 மாதிரி ஒரு catchy யா இருக்கணும்னுதான்.
ம்ம் வாழ்கையில் நம்மளும் அமெரிக்கா வந்தாச்சு 5 மாசமும் ஓடிருச்சு.இந்த 6 மாசத்துல என்ன பெருசா சாதிச்சோம்னு (இதோடா) திரும்பி பார்த்தா ஒன்னும் இல்ல .
இப்பவரைக்கும் டாலர தவிர மத்த எந்த நாணயத்தையும் கரெக்டா அடயாளம் சொல்லவே தெரியல(ம்ம்ம் கேவலமா தான் இருக்கு என்ன பண்ண )
எங்க ஊர்ல மற்றும் சென்னையில் குஜாலா பிரெண்ட்சொட லைப் என்ஜாய் பண்ணிட்டு இருந்தவனுக்கு இந்த ஊர்ல லைப் ஸ்டைல் கொஞ்சம் போர்தான் இருக்கு.
இந்த 5 மாதத்தில் மிஸ் பண்ணிய சின்ன சின்ன (எனக்கு மிக பெரிய) சந்தோசங்கள்
1 ) பைக் ஓட்டுவது .நான் ரெம்ப மிஸ் பண்ணிய விஷயம் இதுதான்.என்னோட யமஹா 135 வும் ராயல் என்பீல்ட்ட் புல்லட்டும் ஏன் காள்ளுகுல்லையே இருக்கு (ஏன் கண்ணுகுல்லையே னுதான் சொல்லனுமா , இது பைக் மேட்டர் )
2 ) மழை நேரத்தில் பிரென்சொட டீ கடையில் நின்னு கழுவாத டம்ப்ளரில் டீ தம் குடிச்சிகிட்டே மொக்கை போடுறது .
3 ) பழைய புக் கடைய தேடி தேடி மக்கல் வாசனை வீச கூடிய புத்தகங்கள் வாங்கறது
4) மெரினா பீச்சு பெசன்ட் நகர் பீச்சு போயி பிகரோட வர்றவனை பாத்து வயறு எரிஞ்சி அந்த எரிச்சல்ல பசங்களோட சேந்து அவங்கள கலாய்க்கறது.
5 ) செகண்ட் ஷோ சினிமா பார்த்துட்டு நைட்டு ரெண்டு மணிக்கு பரோட்டா கடை தேடி அலையறது.
6 ) கைலிய தொடை வரைக்கும் மடிச்சி கட்டிக்கிட்டு புல்லேட்ல தட தடன்னு எதிர் காதுல அம்மாவை கூட்டிகிட்டு திண்டுக்கல் மதுரைன்னு போறது .
7 ) பக்கத்துக்கு வீட்டு அனு பாப்பவ கொஞ்சறது
8 ) நைட்டு பசங்களோட சினிமா தியேட்டர் தண்ணி தொட்டியில் உக்காந்து மொக்கை போடறது
9 ) நாகர், முனியாண்டி விலாசில் புரோட்டா பார்சல் பண்ணி வீட்ல வந்து சுஜாதா புக் படிச்சுகிட்டே சாப்பிடுறது
10 ) இப்ப ப்ளாக்லாம் படிக்க ஆரம்பிச்சவுடனே எல்லா ப்லோக்கேர்ஸ் ரெம்ப பரிச்சியமான மாதிரி ஒரு பீலிங்கு , அதனால அடுத்த தப சென்னை வர சொல்ல எல்லாரையும் மீட் பண்ண ஆசை , யாருக்கும் என்னைய தெரியாது , ஆனா நாம எல்லாரையும் பார்க்கலாம்.
இன்னும் நெறைய சந்தோசங்கள் மிஸ் பண்ணினாலும் பையன் அமெரிக்காவில் இருக்கான்னு அம்மா பெருமையா அடுத்தவர்களிடம் சொல்லி பெருமை படும் நிகழ்வு ஒன்றுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
[தலைப்பு சும்மா ல்லுல்லுலயேஏஎ ,எல்லாம் ஒரு விளம்பரம்தான் ஹி ஹி ஹி]
Sunday, January 17, 2010
தல சான்சே இல்ல உங்க எழுது நடை ஓட்டம் ஜாகிங் எல்லாம் ரெம்ப நல்ல இருக்கு. முக்கியமா வீரசேகரவிலாஸ் தொடர் அப்படியே சாவி, தேவன் எழுத்து மாதிரியே இருக்கு .இந்த அம்மா பதிவு ரெம்ப அருமை அப்படியே ஒரு நிமிஷம் பீலிங் ஆயிட்டேன் (சீரியசா !!) ஆனா இதே பீலிங் அவங்க கூடவே இருந்தா வருமான்னு தெரியல .இன்னும் நிறைய கமெண்ட் போடணும் போல இருக்கு ஆனா டிரஸ் வாஷ் பண்ண போட்டுருக்கேன்.போயி எடுத்துட்டு வந்துட்டு கண்டின்யு பண்றேன்
Monday, October 26, 2009
சிறந்த பிளாக்கர் இல்லன்னா blabber ஆவது எப்படி
சின்ன வயசுல இருந்து படிச்ச கதை,கவிதை,இலக்கியம்(அட்ரா அட்ரா அட்ரா) எல்லாம் கொடுத்த தைரியத்தில் ப்லாக் ஆரம்பிச்சாச்சு.எனக்கு புடிச்ச கேரக்டர் லக்கி லுக்,கணேஷ் வசந்த் , நரேந்திரன் ,வந்தியத்தேவன் இவங்கதான்.கணேஷ்வசந்த் தவிர மத்த கேரக்டர் எல்லாம் உஷாரா நம்ம ஆளுங்க புக் பண்ணிட்டாங்க .கன்னி(gensuku என்னாது kannan நா!! ) ப்லாக் என்ன எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு மூளைய தவிர எல்லாம் இடமும் சூடா ஆய்ருச்சு.
சரி ஆபீஸ் அவர்ல எவ்ளோ ப்லாக் படிச்சு manageruku இனிமா கொடுத்துருப்போம் அந்த அனுபவத்தை வைச்சு எதாவது மொக்கை போடுவோம்ன்னு இதை ஆரம்பிச்சிருக்கேன்.
தைரியம் இருக்கவங்க யாரும் இதுக்கு பின்னூட்டம் போடலாம் !
சிறந்த பிளாக்கர் இல்லன்னா blabber ஆவது எப்படி
(இந்த ப்ளாகில்
வரும் யாவும் கற்பனை அல்ல , முழுக்க முழுக்க உண்மை
)
1) மொதல நீங்க எந்த கட்சின்னு முடிவு பண்ணிக்கோங்க சாருவா இல்ல ஜெயமோகனா.இல்ல நான் ரெம்ப நல்லவன் வில்லு படத்தை கூட பாமிலியோட பார்பேன் அதனால நான் எந்த கட்சியும் இல்லன்னு முடிவெடுத்தா ஐயோ பாவம் உங்கள யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஹிட்ஸ் வராது.
2) சரி கட்சி முடிவு பண்ணியாச்சி இப்போ எந்த கட்சில இருக்கோமோ அதுக்கு ஏத்த மாதிரி சில கீ வோர்ட்ஸ் மனப்பாடம் பண்ணனும்.(எப்படி காலேஜ் பரிச்சைல கொசிடின்ல வந்த நாலு வார்த்தைய வச்சு நாலு பக்கம் எழுதுவோமோ அது மாதிரி )
சாரு கட்சினா ராசலீலா,ஜீரோ டிகிரி,கோணல் பக்கங்கள், மதுமிதாவின் பாம்பு கதைகள்.
ஜெயமோகன் கட்சினா ஏழாம் உலகம்,உயிர்மை,அசோகவனம், நான் கடவுள் படம் அப்புறம் விளிம்பு நிலை மனிதர்கள் (இந்த வார்த்தைய யாருபா கண்டுபுட்சது இந்த உலகத்துல எல்லாரும் விளம்பு நிலை மனிதர்கள் தான்)
3) சரி திடீர்னு சாரு ஆட்டை வறுத்து திங்க போயிட்டாரு இல்ல பிரான்சில பீரு விட போய்ட்டாரு
ஜெயமோகன் அடுத்து "பட்டர் நான் கடவுள்" ன்னு படத்துக்கு வசனம் எழுத கெட்ட வார்த்தை practice பண்ண போய்ட்டாருன்னா உங்களுக்கு டாபிக்கே கிடைக்காது .அதனால சைடுல புதுமைபித்தன்,பிரமிள், தி ஜானகிராமன் அவங்க படைபுகளோட பெயர மனப்பாடம் பண்ணனும்
4) அப்புறம் ரெம்ப முக்கியமா தவறி கூட லோக்கல் தமிழ் சினிமா பத்தி பெருமைய பேசக்கூடாது. உலக சினிமா பத்தி ஒரு தொடர் ஆரம்பி(ச்சு)க்கணும்.
நாடி நரம்பு எல்லாம் சேலம் சிவராஜ் லேகியம் சாப்பிட மாதிரி எனர்ஜிடிக்கா எமொசனலா விமர்சனம் எழுதனும்.படத்த பாக்கனும்னு கூட அவசியம் இல்ல.wiki pediayala கண்டிப்பா விமர்சனம் இருக்கும், என்ன இங்கிலிஷ்ல இருக்கும் ukg படிக்கற அக்கா பையன படிக்க சொல்லி அர்த்தம் கேட்டு விமர்சனம் எழுதனும். முக்கியமா கடைசி லைன்ல இந்த மாதிரி சினிமா எப்ப TAMIla வரும்னு பாவமா ஒரு கேள்வி கேக்கணும். (வந்தா சொல்றோம் போடான்னு பின்னூட்டம் வரும் , கண்டுகாதீங்க)
5) பயண கட்டுரைன்னு ஒரு மெகா சீரியல ஆரம்பிங்க.எந்த டாபிக்கும் இந்த மாசம் கிடைக்கலீனா சும்மா சட்டுன்னு பயண கட்டுரை 7 nu (எவன் நம்பர ஞாபகம் வச்சுக்க போறான்) ஆரம்பிச்சு போகாத ஊர பத்தி ஒரு மொக்கைய எழுதனும்.நீங்க பஸ் ஸ்டாண்ட் போனது , ஆட்டோகாரண்ட திட்டு வாங்கனது, ட்ரைன்ல ஏறாத பிகர பத்தி , ரயில்வேஸ்டேஷன்னோட சுத்தம், பயணத்தில் படிச்ச எதாவது ஒரு புக்கு(யாரு படிச்சா), இடையில சாப்ட சமோசா முறுக்கு காஞ்ச தோசை அப்புறம் முக்கியமா travela யாராவது உங்கள புகழந்து பேசுனது.
6) இப்பதான் பயங்கர முக்கியமான கட்டத்துக்கே வந்திருக்கோம். உங்களுக்குன்னு சொந்தமா ஒரு ஜட்டி இல்லாட்டி கூட ப்லாக் உலகம் மன்னிசுரும் ஆனா உங்களுக்குனு ஒரு கேரக்டர் வேணும்.பேரு வந்து கண்டிப்பா செம லோக்கலா இருக்கனும் அதாவது டோமரு , கோவாலு ,குமாரு,டெல்லி,வாலு.அப்புறம் நம்ம பண்ணின எல்லா கண்றாவியும் இந்த கேரக்டர் பண்ணினதா அடிக்கடி ப்லாக் போடணும்.
7) பக்கத்துக்கு வீட்டு பாட்டி வயசுக்கு வந்த functionku போகட்டியும் பரவா இல்ல ஆனா எங்க புத்தக கண்காட்சி நடந்தாலும் ச்ய்ச்லேபட்ட கொரங்கு பெடல் போட்டாவது போயிரனும்.போகும்போது மறக்காம கேமரா செல் போன் எடுத்துட்டு போங்க.எப்படியும் ப்லாக் போடா டாபிக் தேடி நம்ம ப்லாக்கேர்ஸ் எல்லாம் வந்திருப்பாங்க.அப்புறம் புக்கு விக்க நம்ம ஸ்டார் ரைடர்ஸ் எல்லாம் வந்து இருப்பாங்க. அப்படியே அவங்களோட ஒரு போட்டோ எடுத்துட்டு வந்து ப்ளாகில் போட்டு கெத்து காமிக்கலாம்.
8) அப்புறம் எப்பவும் காமெடி மேட்டராவே போடீங்கனா உங்கள காமெடி பீசுனு சொலிருவங்க அதனால அப்ப அப்ப எதாவது சீரியஸ் மேட்டர் போடணும் .
இப்போதைக்கு எதோ கொஞ்சம் ஜல்லியடிச்சுருகேன்(சுஜாதா ரசிகன்னு காமிக்க வேணாமா )
வேற யாராவது டாபிக் கிடைகலீனா இதையே கண்டின்யு பண்ணுங்க
கணேஷ் : வசந்த் என்ன தேருவமா இந்த கேசுல
வசந்த் : பாஸ் கண்டிப்பா தேறுவோம்.நான் நேத்தே நம்ம ரிசப்னிஸ்ட் மாலா கைய புடிச்சி ஜோசியம் பாத்துட்டேன்
கணேஷ் : நீ திருந்தவே மாட்ட

Subscribe to:
Comments (Atom)